தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Jul 2026, 9:39 pm
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

பழனி கோவில் நில மோசடி சார்-பதிவாளருக்கு இடைக்கால முன்ஜாமீன்!

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட புகாரில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து பாது காப்பு கோரி ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக, பழனி கோவில் நிலக் கண்காணிப்பாளர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது, வெள்ளியன்று விசாரணை நடைபெற்ற போது, ‘கோவில் நிலம், அப்போதைய சார்-பதிவாளர் பால சுந்தரால் தான் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பத்திரத்துக்கு ஆவண எண் மட்டுமே வழங்கிய ஜஸ்டின் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. இதனையேற்று, ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆகஸ்ட் 3 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செயல் திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் Women’s Quality Employment Plan (WQEP) என்ற புதிய செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பெண் களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்த, ஆலோ சனை நிறுவனத்தைத் தேர்வு செய்ய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. மாவட்ட வாரியாக எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறியவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அமலாக்கத் துறை சோதனை

சென்னை: சென்னையைச் சேர்ந்த மனிதமுடி ஏற்று மதி நிறுவனங்களான நந்தலாலா எண்டர்பிரைசஸ், ராம் ஏர் இம்பெக்ஸ் ஆகியவற்றில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.2.39 லட்சம் இந்திய ரொக்கம், 16,823 அமெரிக்க டாலர்கள், 1,860 யூரோக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. சென்னை விமான நிலையத்தில் செனகல் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான டாலர் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் இந்நிறு வனங்களுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் வழங்கியது தெரியவந்தது. துபாய் நிறுவனங்கள் வழியாக ரூ.50 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்த னைகள் நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித் துள்ளது.

சுயவிவரம் பதிவு செய்த முதல்வர் விஜய்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தனது சுயவிவரத்தைப் பதிவு செய்த முதல்வர் விஜய், பொது மக்களின் தகவல் கள் ரகசியமாகப் பாது காக்கப்படும் என்றும், அனைவரும் இணைந்து கணக்கெடுப்பை வெற்றி கரமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டார்.

குதிரை பேரம்: டிஜிபியிடம் அதிமுக புகார்

சென்னை: தமிழ்நாட் டில் நடைபெறும் குதிரை பேரத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ் நாடு காவல்துறை டிஜிபி யிடம் அதிமுகவின் சட்ட மன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாடா ளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் புகார் அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் குதிரை பேரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இருப்ப தாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியில் கூறியுள்ளார்.

நான் செய்த பிழைகள்: வைகோ

சென்னை: “2006 -இல் மதிமுக நிர்வாகி களின் நிர்பந்தத்தால் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது என் வாழ்க்கையில் முதல் பெருந்தவறு; 2017-இல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழை. பொதிகை மலை உறுதியாக இருப்ப தைப் போல சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் செய்துள் ளோம். இனி நமக்கு எவ்வித கேடும் யாரும் செய்ய முடியாது” என மதி முக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்

சென்னை: செப்.6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, தற்போது செப் டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆன் லைன் விண்ணப்பப் பதிவு, ஜூன் 30 அன்று துவங்கிய நிலையில், இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 கடைசி நாள்.

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதியா?-அமைச்சர் விளக்கம்

சென்னை: கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங் கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதை அனுமதிப்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி யிருந்தது. அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்க அறிக்கை வெளியிட்டார். உணவகத் துடன் கூடிய மதுபானக் கூடம் (ரெஸ்டோ-பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர் பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், துறையை சீரமைக்க சில ஆலோ சனைகள் மற்றும் விவாதங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரி வித்தார்.

ஓய்வூதியத்தைப் பறிக்கும் நடவடிக்கையை எதிர்த்து செப்டம்பரில் ஆர்ப்பாட்டம்!

சென்னை: ஓய்வூதியத்தைப் பறிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கையைக் கண்டித்து, செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களி லும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற அமைப்பின் மாநிலக் குழு கூட்டத் தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பின் தலைவர் எஸ்.ஜெகதீசன், பொதுச் செயலா ளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், 8-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை பாகுபாடின்றி அமல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் கூட்டமைப்புப் போராட்டத்தில் மின்வாரிய ஓய்வூதியர்களும் பங்கேற்பர் எனத் தெரிவித்தனர். பிரிக்கப்பட்ட நிறுவனத்தின் பணப்புழக்கத்திற்கு ஏற்பவே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாணையைத் திருத்த வேண்டும் என்றும், மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை யைக் கூட்டிய உத்தரவை ஓய்வூதிய அமைப்புகளுடன் விவா தித்த பிறகே அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.