தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Jul 2026, 9:26 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது எப்படி?

அமைச்சர் விளக்கம் சென்னை: தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரி கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக உயர்ந்ததால், அவை மாநில அரசின் இடஒதுக்கீட்டு வரம்பிலிருந்து வெளியேறிவிட்டதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தடை யில்லாச் சான்றிதழைத் தாமதமாக மறுத்ததால், அவர்கள் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றனர்; இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய 600 இடங்கள் பறிபோ யின என்றார்.

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்: முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதித்துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. மேலும், அரசு விடுதிகளில் உணவின் தரம் மற்றும் கல்வி உதவித்தொகை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுடன் ஆலோசனை

சென்னை: இம்மாத இறுதியில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், விவசாயிகளின் தேவைகளை அறியும் நோக்கில் அமைச்சர் வினோத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சாவூர், சேலம் மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த அவர், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பல்வேறு மாவட்ட விவசாயி களுடன் காணொளி வாயிலாகவும் கருத்துகளைக் கேட்ட றிந்தார்.

மாநில அரசுக்கே அதிகாரம்: வில்சன்

சென்னை: பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடு தல் குழுவில் யுஜிசி உறுப்பினரைச் சேர்ப்பது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும் எனத் திமுக எம்பி பி. வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துணைவேந்தரை நியமிப்பது முற்றிலும் மாநில அரசின் அதிகாரம் என்றும், பாஜக ஆளும் குஜராத்தில் கூட மாநில முதல மைச்சரே வேந்தராக இருக்கிறார் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அக்காவாகத் தான் கீர்த்தனா பேசினார்: ராஜ்மோகன்

சென்னை: அமைச்சர் கீர்த்தனா பள்ளி மாணவி யிடம் ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் கலந்துரையாடி னார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து இது குறித்து விசாரித்ததாகக் கூறிய அவர், பள்ளிகளில் ஆய்வு என்பது வழக்கமான மரபு என்றும், அரசியல் காரணங்களுக்காக இதனைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

கரூர் விபத்து: அமைச்சர் மீது சிபிஐ-யிடம் புகார்

சென்னை: கரூரில் 41 பேர் பலியான விபத்து வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் வகையில் பேசி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சிபிஐ-யிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார். மேலும், ஜூலை 10 அன்று முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளதால், அவரது பயணத்தைச் சிபிஐ கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக சல்மா எம்பி கடிதம்

சென்னை: சிவகாசி அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த போது மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகத் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் சல்மா கடிதம் எழுதியுள்ளார். குழந்தை யின் அடையாளத்தை மறைக்காமல் அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்படுவது இளம் சிறார் நலச் சட்டங் கள் மற்றும் ஐநா குழந்தை உரிமைகள் உடன்படிக்கைக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு: கல்வி அமைச்சர் மறுப்பு

சென்னை: அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் 4, 5-ஆம் வகுப்புகளுக்குப் பாடப்புத்தகங் கள் முழுமையாக வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோ கன், 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதர வகுப்புகளுக்கான புத்தகத் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு வதாகவும் விளக்கமளித்துள்ளார்.

மின்தடைகளை ஒழிக்க புதிய திட்டம்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகளை நிரந்தரமாக நீக்க “Repeat Tripping E limination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறி முகப்படுத்தியுள்ளார். இதன்படி, அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அறிவியல் அடிப்ப டையில் காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்கட்ட மைப்புகள் மேம்படுத்தப்படும்.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: தவெக எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜா விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் தினமும் காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலை யத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

பள்ளி அறிவிப்புப் பலகையில் கல்விக் கட்டணங்களின் விபரம் தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு நிர்ண யித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, தனியார் பள்ளிகள் தங்களின் அறிவிப்புப் பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்த ரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தமி ழகம் முழுவதும் செயல் பட்டு வரும் தனியார் நர்சரி, தொடக்கப் பள்ளி கள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என நீதி மன்றம் தெளிவுபடுத்தி யுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் கடந்த மே 25 அன்று பிறப்பித்த உத்தரவின் பேரில், தனியார் பள்ளி கள் வசூலிக்கும் கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் தெளிவாக காட்சிப்படுத்த வேண் டும் என்று தனியார் பள்ளி கள் இயக்குநர் கடந்த ஜூன் 1 அன்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் கே. பழனியப்பன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் வராத நிலையில், மாநில தக வல் ஆணையம் இத்த கைய உத்தரவை பிறப் பிக்க அதிகாரம் இல்லை என்றும், அதன் அடிப்ப டையில் வெளியிடப்பட்ட இயக்குநரின் சுற்ற றிக்கையும் சட்டபூர்வ மானதல்ல என்றும் மனு தாரர் தரப்பில் வாதிடப் பட்டது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி எம். தண்ட பாணி, தனியார் பள்ளி களின் கோரிக்கையை நிராகரித்து, அரசு நிர்ண யித்த கட்டணத்தை அறி விப்புப் பலகையில் வெளியிடுவது சட்டத் திற்கு முரணானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.