தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 hour before

பயிற்சியின் போது இயந்திரக் கோளாறு: வண்டலூரில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்!

சென்னை, ஜூலை 6 - சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிறுவனத் திற்குச் சொந்தமான ‘இசட்ஏ 1420’ ஹெலிகாப்டர் பயிற்சி யில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதைக் கவனித்த விமானி, வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்கினார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கோளாறு குறித்துப் பயிற்சி நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானப்படை அதி காரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஹெலிகாப்டரை ஆய்வு செய்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரக் கோளாற்றைச் சரிசெய்ய வந்த 3 ஹெலி காப்டர்கள் ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்டு, ஒன்றன் பின் ஒன்றாகத் தரையிறங்கி உபகரணங்களை இறக்கி விட்டுச் சென்றன.

மு.க.ஸ்டாலின் பெயரிலான கல்வெட்டை அகற்றுவதா? அரசுக்கு திமுக கண்டனம்

சென்னை, ஜூலை 6 - சென்னை அருகில் நெம்மேலியில் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்ற கல்வெட்டு அகற்றப்பட்டதற்குத் தா.மோ. அன்பரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட பல திட்டங்களின் கல்வெட்டுகள் அகற்றப்பட்டு வரு வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தவெக அரசு தொடர்கிறது எனவும், சில்லரைத்தனமான நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபடுவதாகவும் தெரி வித்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை மக்கள் மனதிலிருந்து அகற்ற முடியாது என்று தெரி வித்துள்ளார்.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜூலை 6 - சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சேவை யாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண் ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், விண்ணப் பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in இணைய தளம் மூலம் மட்டுமே ஜூலை 13, 2026 மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ஆகஸ்ட் 15, 2026 சுதந்திர தின விழாவில் ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்பு

சென்னை, ஜூலை 6 - ஜூலை 8 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங் களில் ஒரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதி களில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 9 முதல் 12 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிக்கை தெரிவிக்கிறது. ஜூலை 7 முதல் 10 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றாலும், சில பகுதிகளில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும். சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கட லுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணை ஒத்திவைப்பு சென்னை:

அம லாக்கத் துறையின் லுக்-அவுட் நோட்டீசை எதிர்த்து செந்தில் பாலா ஜியின் சகோதரர் அசோக் தாக்கல் செய்த மனுவின் விசார ணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. அரசு வேலைக் குப் பணம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அன்புமணி சந்திப்பு சென்னை:

சென்னை தலைமைச் செயல கத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தை, பாமக தலை வர் அன்புமணி சந்தித்துப் பேசினார். பாமக சட்ட மன்ற உறுப்பினர்கள் நால்வருடன் சேர்ந்து அமைச்சர் ஆனந்தைச் சந்தித்த அன்புமணி, நீர்நிலைகளைப் பாது காப்பது தொடர்பான பரிந் துரைகளை அமைச்ச ரிடம் வழங்கியதாக தக வல் வெளியாகியுள்ளது.

தவெக ஸ்டிக்கர்:

இளங்கோவன் விமர்சனம் சென்னை: திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட திட்டங் களைத் தங்களின் திட்டங்கள் எனச் சொல் லிக் கொள்ள தவெக அரசு விரும்புவதாகத் திமுக செய்தித் தொடர் பாளர் டிகேஎஸ் இளங் கோவன் தெரிவித்து உள்ளார். திட்டத்தின் பெயரை மாற்றிய பாஜக வைப் போலவே தவெக அரசும் திட்டங்களின் பெ யர்களை மாற்றி வருவ தாகக் குற்றம் சாட்டிய அவர், இவர்கள் ‘Game Changer’கள் அல்ல, வெறும் ‘Name Changer’கள்தான் என வும் விமர்சித்துள்ளார்.

விரைவில் அரசு டெண்டர் சென்னை:

தமிழ் நாட்டில் பொதுப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக் கையாக, மாநில அரசு போக்குவரத்துக் கழ கத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்து களை வாங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டர் நடைமுறைகள் விரைவில் தொடங்கப் படும் என தெரிவிக்கப் படுகிறது.

மின்வாரிய ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல்!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து நிரந்தரப் பணியாளர்களுக்கான இடமாறுதல்கள் இனி வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் கீழ் இயங்கும் மின் பகிர்மானக் கழகம், மின் உற்பத்திக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம் ஆகியவற்றில் 75 ஆயி ரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு விரும்பிய இடங்களில் பணிமாறுதல் வழங்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தாலும், இதுவரை அரசியல் சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டுமே விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடமாறுதலில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரும் வகையில் இந்த மாதம் முதல் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இடமாறுதல்கள் வழங்கப்படவுள்ளன. இடமாறு தல் பெற விரும்பும் ஊழியர்கள் இதற்கான இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; காலியிடங்களின் விவரங்களும் அதில் தெரிவிக்கப்படும். சீனியாரிட்டி அடிப்படையில் விண்ணப்பிப்போர் கேட்கும் இடம், காலியிடம் ஆகிய அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் பதிவாகும் என்பதால் விதிமீறல்கள் தடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.