தீக்கதிர் முக்கிய செய்திகள்
19 Jul 2026, 9:39 pm

தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை, ஜூலை 19 - தேசிய விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையு லகக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய விருது பெற்றுள்ள நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என வாழ்த்தி னார்.

ஜூலை 22 வரை வெயில் சுட்டெரிக்கும்

சென்னை, ஜூலை 19 - ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பொதுவாக மிதமான மழைப் பொழிவும், அதிக காற்றின் தாக்கமும், அவ்வப்போது சாரல் மழையும் காணப்படும். இதனால் ஜூன், ஜூலை மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேனி, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழைக் காலம் தொடங்கி மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜூலை 22 ஆம் தேதி வரை இயல்பைவிட வெயில் அதிக மாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அதிக கட்டணம் ஏன்? தலைமை பொறியாளர் விளக்கம்

சென்னை, ஜூலை 19 - மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறை பாடுகளால் சில இடங்களில் அதிக கட்டணம் பதிவாகி யுள்ளது என்று தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மின்வாரிய தலைமை பொறியாளர் தமிழ்நாடு முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மின்சாரத் துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொது மக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியா ளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த மீட்ட ரின் மின் அளவுகளில் இருந்து ஆரம்பத்திலேயே பிரச்ச னையை பிரிவு அலுவலகம் கண்டறிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 7,297 பேர் பாம்புக் கடியால் பாதிப்பு!

சென்னை, ஜூலை 19 - தமிழ்நாட்டில் பாம்புக் கடியால் கடந்த ஆறு மாதங் களில் 7,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரி ழந்துள்ளனர். திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மற்றும் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில், அதிகளவில் பாம்புக்கடி சம்பவங்கள் நடப்பது தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 572 பேரும், விழுப்புரத்தில் 485 பேரும், திருச்சியில் 480 பேரும், கோவையில் 411 பேரும், தருமபுரியில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 186 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் ஆகிய விஷப் பாம்புகளின் கடியால் அதி களவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக் கடிக்கான மருந்து கள் உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கப் பட்டதாகப் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

உதவித் தொகை உயர வாய்ப்பு

புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக்கோட்டையில் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெ.முக மது பர்வேஸ், “தமிழகத்தில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்களின் விவரங்கள் அரசிடம் உள்ளன. மாவட்டம் தோறும் அதி காரிகளும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சிவகாசி பட்டாசு ஆலை தொழி லாளர்களுக்குப் பாதுகாப்புஉப கரணங்கள் வழங்குவது உள் ளிட்ட தொழிலாளர்களின் கோரிக் கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும், தேயி லைத் தோட்ட நல வாரிய தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது” என தெரிவித்தார்.

ஜூன் 26 முதல் குருவாயூர் ரயில் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கம்

திருநெல்வேலி, ஜூலை 19- குருவாயூர், பாலக்காடு விரைவு ரயில்கள் எல்எச்பி ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. நெல்லை வழியாக செல்லும் தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் (வண்டி எண். 16791/16792) எல்எச்பி பெட்டிகளுடன் தூத்துக்குடியில் இருந்து ஜூலை 20 முதல் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து 21ஆம் தேதி எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 10 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிக்கான பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும். அதே போல் மதுரை - குருவாயூர் - மதுரை விரைவு ரயில் (16327/16328) எல்எச்பி பெட்டிகளும் மதுரையில் இருந்து, வருகிற 26 ஆம் தேதியிலிருந்தும், மறு மார்க்கத் தில் குருவாயூரில் இருந்து 27ஆம் தேதியும் இயக்கப் படுகிறது. இந்த ரயிலில் ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள் - 2, பொது பெட்டிகள் -8, ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு ஏற்கெனவே உள்ள ரயில் பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ரயில்கள் விசாலமான எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மாநில அரசுப் பணிக்கு திரும்பும் ராஜேஷ் லக்கானி

சென்னை: ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானியை, தமிழக அரசுப் பணிக்கு மாற்றம் செய்து, ஒன்றிய பணி யாளர் நலத் துறை அறி வித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுப் பணியில் இருந்து, ஒன்றிய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.

8 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி இளைஞர் சபரிவர்மன் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட னர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட் டிருந்த கைதிகளில் 8 பேர் பாளையங் கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 8 பேரில் அஜித், ஜெகன், அரவிந்த், விஷ்ணு ஆகிய 4 பேரை காவ லில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்ட மிட்டுள்ளனர்.