தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Aug 2026, 9:46 pm

8 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை!

சென்னை, ஆக. 13 -அந்தமான் அருகே 6,016.87 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேசியபுலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் தமிழ்நாடு உள்பட 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.2024 நவம்பரில் வங்காள விரிகுடா பாரன் தீவுகள் அருகே மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்றில் நடத்தப்பட்டசோதனையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் சாட்டிலைட் தொலைபேசி பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர்கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை ஆகஸ்ட் 11 அன்றுஎன்.ஐ.ஏ. கையில் எடுத்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 8 இடங்களும், மிசோரத்தில் 5இடங்களும் என மொத்தம் 13 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர்.சோதனையில் சென்னையில் ரூ. 71 லட்சம் ரொக்கம், 53,500 அமெரிக்க டாலர்கள், 1.50 லட்சம் மியான்மர் கியாட்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மிசோரம் சாம்பாய் பகுதியில் ரூ. 22.38 லட்சமும், அய்ஸ்வால் பகுதியில் ரூ.20.73 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு அமைச்சர் கீர்த்தனா தகவல்

சென்னை, ஆக. 13 -தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலீட்டுக்கானநம்பகமான மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில்மொத்தம் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 2036-ம்ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதலமைச்சர்நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதேஇலக்கு எனவும், 21 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தஅவர், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ மாநாடு அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதையைக் காட்டும் முக்கிய மைல்கல்என்று குறிப்பிட்டார்.

மக்களை ஏமாற்றி மீண்டும்ஆட்சிக்கு வர துடிக்கும் பாஜக!டி.கே.எஸ். இளங்கோவன் சாடல்

சென்னை, ஆக. 13 -காவிரி நீர் பகிர்வு தொடர்பான வழக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் திறக்கப்பட வேண்டும் என்பதே சட்டம் என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குறித்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இதுஅறிமுகப்படுத்தப்பட்டபோது திமுக வலுவாக எதிர்த்ததால் ஒன்றிய பாஜக அரசால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.

தென்னிந்திய மாநிலங்களின் இடங்கள் குறைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு செல்வதையும், அதன் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் உரிமைகளை இழப்பதையும், மேலும், இந்த மசோதாவால் பாஜகபயனடைவதையும் தாங்கள் விரும்பவில்லை. தற்போது எதிர்ப்பை சந்திக்கும் பாஜக, மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர இதை பயன்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் முழு அடைப்பு :வழக்கம் போல இயங்கிய அரசுப் பேருந்துகள்!

கிருஷ்ணகிரி, ஆக. 13 -கன்னட அமைப்புகள் ஆகஸ்ட் 13 அன்று கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தன. தமிழ்நாட்டிற்கு காவிரியில் 15 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்குமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்கர்நாடகத்திற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்துவழக்கம் போல் நடைபெற்றது. அசம்பாவிதங்களைத் தடுக்க ஓசூர் ஜூஜூவாடி எல்லை சோதனைச் சாவடியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எப்சிஆர்ஏ திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெறுக!பி. வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை, ஆக. 13 -வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைமன்றத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.ஒன்றிய பாஜக அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை எனினும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது நேர்மறையான நடவடிக்கை என்று அவர்தெரிவித்துள்ளார்.

இது தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி, சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளைமுழுமையாக பரிசீலிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.ஜூன் 17 ஆம் தேதி மற்றும் ஜூலை 20 ஆம் தேதி நடத்தப்பட்ட தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத்தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் பங்கேற்றதாகவும், ஜூன்28 ஆம் தேதி நாடு தழுவிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு, ஜூலை 3-ஆம் தேதி தேசிய எதிர்ப்பு தினம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் குழு மத்திய

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கவலைகளை எடுத்துரைத்த தாகவும், மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றகோரிக்கையில் கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளதாகவும், இந்த கடினமான காலகட்டத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கனிமச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்!

கனிமொழி எம்.பி. கோரிக்கை

சென்னை, ஆக. 13 -மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில்,மக்களவையில் முறையான விவாதங்கள் இன்றி, ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய எம்எம்டிஆர் சட்டத் திருத்தமசோதா -2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் எனத் தெரிவித்த அவர், 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வள வரி விதிக்கும் அதிகாரத்தை இத்திருத்தச் சட்டம்நீர்த்துப்போகச் செய்வதாகவும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி மாநிலங்களின் நிதி சுயாட்சியைபறிக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஒன்றிய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு எங்கே?ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை, ஆக. 13 -ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2023 ஜூன் 17 முதல் 25 வரை நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த ஜி.ஜி. பூஜா பங்கேற்றார். 25 மீட்டர் பிரீஸ்டைலில் சிறப்பாக செயல்பட்ட ஜி.ஜி. பூஜா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சர்வதேச விளையாட்டுப் போட்டி களில், தங்கப்பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையர்களுக்கு, 5 லட்சம்

ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறைஅமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால் பூஜாவிற்கு ஒன்றிய அரசு இதுவரை ரொக்கப் பரிசு வழங்கவில்லை.

விளையாட்டுக் குழு உறுப்பினர் வாயிலாக, பதக்கச்சான்று, அடையாளச் சான்று, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் பூஜாவிற்கு பரிசு கிடைக்கவில்லை.

இதுகுறித்து, பூஜாவின் தந்தை கிரிதர் ராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக், ஒன்றிய இளைஞர்விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சக செயலர்உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தர விட்டுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசுக்கு கண்டனம்

சென்னை, ஆக. 13 -தமிழக அரசு சார்பில், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர் களுக்கு அனுமதி மறுக்கப் பட்டதை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம்அறிக்கை வெளியிட்டுள்ளது.

இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்த மன்றம், கலைவாணர் அரங்கு தேசிய கைத்தறி தின நிகழ்வு, மெட்ரோ ரயில்நிலைய நிகழ்வு, பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உள்ளிட்ட பல அரசு நிகழ்வுகளிலும்பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிட்டது.இது செய்திகளை அரசு தணிக்கை செய்வதற்குச் சமமானது எனக் கூறியுள்ள பத்திரிகையாளர் மன்றம்அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையா ளர்களை அனுமதிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனசெய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு கோரிக் கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவு!

சென்னை, ஆக. 13 -14 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியமனுவில், தேர்தல் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளையும் விரைவாக முடித்து தேர்தலை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு!

சென்னை, ஆக. 13 -சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பேரிகார்டுகள் அமைத்து போலீசார் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் உள்ள பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.