முந்தய பக்கம்

திருச்சி புறநகரில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு

15 Jul 2026, 9:53 pm
திருச்சி புறநகரில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
<p><strong>திருச்சி புறநகரில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>திருச்சி புறநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாகச் சேகரிக்கப்பட்ட 202 தீக்கதிர் நாளிதழ்களுக்கான சந்தாக்களை, ‘வெண்மணி’ இல்லத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரனிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் ஒப்படைத்தார். ​நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, எம். ஜெயசீலன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. சிவராஜன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெயபால் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் என். சங்கரய்யாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram