முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் 150 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு

22 Jul 2026, 11:04 pm
திருவண்ணாமலையில் 150 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
<p><strong>திருவண்ணாமலையில் 150 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 150 தீக்கதிர் சந்தாக்களை, தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் எம்.பிரகலநாதன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான ந.பாண்டி அவர்களிடம் வழங்கினார். செவ்வாயன்று (ஜூலை 21) பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்டு சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ந.சேகரன் வரவேற்றார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட மூத்த நிர்வாகி எம். வீரபத்திரன் ஆகியோர் உரையாற்றினர். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram