மணப்பாறையில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
12 Jul 2026, 9:10 pm
<p><strong>மணப்பாறையில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p><p>சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்ட மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஒன்றியக் குழுக்கள் சார்பாக சிறப்பு பேரவைக் கூட்டம் மற்றும் ‘தீக்கதிர்’ நாளிதழ் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மூன்று ஒன்றியங்கள் சார்பில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் சந்தா தொகையை, அந்தந்த ஒன்றிய செயலாளர்கள் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் ஒப்படைத்தனர். இக்கூட்டத்தில் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் நாகராஜன், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சிதம்பரம் ஆகியோர் உரையாற்றினர். இதில் கிளைச் செயலாளர்கள் மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.</p>
