தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தீக்கதிர் சந்தா வழங்கும்
20 Jul 2026, 9:57 pm
<p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது. சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, புளியங்குடி, ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக 97 சந்தாக்கள் வசூல் செய்யப்பட்டு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, அசோகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
