தூத்துக்குடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
8 Jul 2026, 8:58 pm
<p><strong>தூத்துக்குடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில், புதன்கிழமையன்று பழையகாயல், முத்தையாபுரம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் உற்சாகமாக நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்று, சந்தா சேகரித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூணன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ரசல், இரா. பேச்சிமுத்து, தா. ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
