தஞ்சாவூரில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு
14 Jul 2026, 9:06 pm
<p><strong>தஞ்சாவூரில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், பூதலூர் தெற்கு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 84 சந்தாக்கள், தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கப்பட்டன. நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தீக்கதிர் மாவட்டப் பொறுப்பாளர் ஆர். மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. செந்தில்குமார், எஸ். தமிழ்ச்செல்வி, என். சரவணன், ஆர். கலைச்செல்வி, எம். செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் சி. பாஸ்கர் (பூதலூர் தெற்கு), எஸ். கோவிந்தராஜ் (ஒரத்தநாடு), எஸ். கந்தசாமி (பட்டுக்கோட்டை), வை. சிதம்பரம் (மதுக்கூர்), வே. ரெங்கசாமி (பேராவூரணி), வி.ஆர்.கே. செந்தில்குமார் (சேதுபாவாசத்திரம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
