தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
9 Jul 2026, 11:23 pm

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே. நேரு மற்றும் மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர் ஆகியோர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இ. முத்துக்குமாரிடம் 8 தீக்கதிர் ஆண்டு சந்தாக்கான தொகையை ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், அதிமுக மாவட்ட பிரதிநிதி முருகவேல், திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், மருத்துவர் மூர்த்தி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் வாசு மற்றும் ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோரிடம் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.பகத்சிங்தாஸ், திருப்போரூர் வட்டச் செயலாளர் எம்.செல்வம், என்.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சரப்பாக்கம் ஒன்றிய குழுவின் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகின்றது. வேடந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கட்சியின் அச்சரப்பாக்கம் ஒன்றியக் குழு செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மாவட்ட குழு உறுப்பினர் வி.திருமலை, ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்றனர்.