‘ஜூலை 1 - 15’ தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாவட்டங்களில் தலைவர்கள் பங்கேற்பு
2 Jul 2026, 9:21 pm

‘ஜூலை 1 - 15’ தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாவட்டங்களில் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, ஜூலை 2 - உழைக்கும் வர்க்கத்தின் வாளாகவும், கேடயமாக வும் விளங்கும் தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1 அன்று துவங்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அத்தனை மாவட்டக்குழுக்களும், ஒன்றியங்கள், நகரங்கள், கிராமங்கள் தோறும் வீடு, வீடாகச் சென்று தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாக்களை சேர்த்து வரு கின்றனர்.

அந்த வகையில், கோவை பீளமேடு நகரக்குழு மற்றும் எஸ்.எஸ். குளம் கிழக்கு ஒன்றியக்குழு மற்றும் கட்சியின் மாவட்ட க்குழு அலுவலக கிளை கள் சார்பில் சேகரிக்கப் பட்ட தீக்கதிர் சந்தாக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.இராம மூர்த்தி மற்றும் மாவட்டக்குழு, ஒன்றி யக்குழு செய லாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேபோல சேலம் மாநகர மேற்கு இடைக்கமி ட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட சந்தாக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணனிடம் வழங்கப் பட்டன.

இதில், மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கனகராஜ், மேற்கு மாநகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகரில், சிபிஎம் தொழிற்சங்க அரங்க ங்களில் பணியாற்றும் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவைக் கூட்டம், மதுரை மேலப்பொன்ன கரத்தில் அமைந்துள்ள தோழர் வி. வாழவந்தான் நினைவகம் (சிஐடியு மாவட்ட க்குழு அலுவலகம்) வளாகத்தில் புதனன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்தப் பேரவையில், சேகரிக்கப் பட்ட சந்தாக்கள், கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கத்திடம் வழங்கப் பட்டன. மாவட்டச் செயலா ளர் மா. கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா. லெனின், வை. ஸ்டா லின், தீக்கதிர் பொது மேலா ளர் ஜோ.

ராஜ்மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ். சந்தியாகு, ஜே. லூர்து ரூபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாநக ரில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்ன துரை தலைமையில் நடை பெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு. மதியழகன், கி. ஜெய பாலன், மாநரச் செயலா ளர் எஸ். பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.