சேரன்மகாதேவி ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
29 Jun 2026, 9:12 pm
<p><strong>சேரன்மகாதேவி ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>திருநெல்வேலி,ஜூன் 29 - ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவ தும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது/ திருநெல்வேலி மாவட்டத்தி லும் இதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றிய குழுவிற்குட்பட்ட பத்தமடை கிளையில் ஐந்து ஒரு வருட சந்தா, மூன்று ஆறு மாத சந்தா, மூன்று மாத சந்தா என 11 சந்தா வசூல் செய்யப்பட்டது .மேற் படி சந்தாவிற்கான பணம் ரூ.17,400 சேரன்மாதேவி ஒன்றிய குழு உறுப்பினர் கோமுக நாயகன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.மோகனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அருள் பாலசுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப்பினர் கள் பட்டமுத்து, ரவி, நாகை யன், ஜெயந்தி, நம்பி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.</p>
