தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் நிருபர் உட்பட 3 பேருக்கு கொலை மிரட்டல்! 3 பேர் மீது வழக்குப்பதிவு – எதிர்த்தரப்பினர் பொய்ப் புகார்

5 Nov 2026, 11:20 pm
தீக்கதிர் நிருபர் உட்பட  3 பேருக்கு கொலை மிரட்டல்! 3 பேர் மீது வழக்குப்பதிவு – எதிர்த்தரப்பினர் பொய்ப் புகார்

தீக்கதிர் நிருபர் உட்பட 3 பேருக்கு கொலை மிரட்டல்! 3 பேர் மீது வழக்குப்பதிவு – எதிர்த்தரப்பினர் பொய்ப் புகார்

தென்காசி, நவ. 5 –தென்காசி மாவட்டம், திருவேங்க டம் வட்டம், செவல்குளம் கோபால கிருஷ்ணபுரம் தெருவைச் சேர்ந்தவர் எம். காளிராஜ் (36). இவர் தீக்கதிர் நாளிதழின் மாவட்ட நிருபராக உள்ளார்.இப்பகுதியில் ஒன்றியக் கவுன்சிலர் பொதுநிதியில் தொடங்கப்பட்ட வாறுகால் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், அதனைத் தொடரக் கோரி காளிராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.நீதிமன்ற உத்தரவை யடுத்து, அதிகாரிகள்பணியைத் தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த அக். 16-ஆம் தேதி இரவு, இதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் அவரது மகன்கள் குருசாமி, விஜய் ஆகி யோர் காளிராஜின் வீட்டுக்குச் சென்று, வாறுகால் பிரச்சனையில் தலையிடுவது தொடர்பாக அவரைத்

தகாத வார்த்தைகளால் திட்டிக்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது உடனிருந்த செவல்குளம் சிபிஎம் கிளைச் செயலாளர் ரமேஷையும் அரிவாளால்வெட்டிக் கொலை செய்துவிடுவ தாக மிரட்டித் தாக்க முயன்றுள்ள னர்.

இதுகுறித்து காளிராஜ் அளித்த புகாரின்பேரில், மூவர் மீதும் குருவிகுளம் போலீஸார் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 296(b), 351(2)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தீக்கதிர் செய்தியாளர் காளிராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் காளிராஜ், சிபிஎம் கிளைச் செயலாளர் ரமேஷ் ஆகிய மூவரும் தங்களுக்குக்கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பால்ராஜ் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் பொய்ப் புகார் அளித்துள்ள னர்.

மிரட்டல் விடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டும்!

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வாறுகால் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். இயற்கையான நீர்வழித்தடத்தில் வாறுகால் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிருபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பால்ராஜ் மற்றும் அவரது மகன்கள்குருசாமி, விஜய் ஆகிய மூவரையும் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் பி. உச்சி மாகாளி வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.