தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

17 May 2026, 9:41 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

மராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து அலோட் ரயில் நிலையங்களுக்கு இடையே, திருவனந்த புரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பி1 ஏசி பெட்டி யிலும், அதனுடன் இணைந்திருந்த எஸ்எல்ஆர் இருக்கை மற்றும் சரக்குப் பெட்டியிலும் ஞாயிறன்று அதிகாலை 5:15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது அந்தப் பெட்டியில் 60க்கும் மேற்பட்ட பய ணிகள் இருந்தனர்.

பி1 பெட்டியிலிருந்து புகை, நெருப்பு வெளியேறுவதைக் கண்ட ரயில் காவ லர், முதலில் ரயில் ஓட்டுநரை எச்சரித்தார். அதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, அவசர வெளியேற்ற நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ரயிலின் மேல்நிலை மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப் பட்டதுடன், தீ மேலும் பரவாமல் தடுப்ப தற்காக பாதிக்கப்பட்ட பெட்டி ரயிலிலி ருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இத னால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.

தீ விபத்துக்கான காரணம் தொடர் பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை யைத் தொடங்கியுள்ளனர். தீ விபத்தின் காரணத்தை கண்டறியும் வகையில், பாதிக்கப்பட்ட பெட்டியையும் அதனு டன் தொடர்புடைய உபகரணங்களை யும் அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர்.

அபுதாபி அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக் கிய நகரான அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் மீது ஞாயி றன்று திடீரென ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அபுதாபி அணு மின் நிலையம் மீது ட்ரான் தாக்குதல் எந்த நாடு என்பது தொடர்பாக ஞாயி றன்று இரவு 7 மணி வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலில் அணுமின் நிலை யத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அபுதாபி ஊடக அலு வலகம் சமூக ஊடகப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில்,”அல் தப்ரா பிராந்தி யத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலை யத்தின் உள் எல்லைக்கு வெளியே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டரில், ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தை அபுதாபி அதிகாரிகள் கை யாண்டனர். இச்சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் கதிரி யக்க பாதுகாப்பு அளவுகளிலும் எந்தப் பாதிப்பும் இல்லை” என்றும் அதில் சேர்க் கப்பட்டுள்ளது. புதுதில்லி

ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி கடும் சரிவு

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச்சூழல், இந்தியாவின் எரிசக்திப் போக்குவரத்தை மட்டுமன்றி, நாட்டின் மிக முக்கியமான வணிகத் துறையான ரத்தினங்கள், ஆப ரணங்கள் ஏற்றுமதியையும் கணிசமாகப் பாதித்துள்ளது. அதாவது ஏற்றுமதி 9.07% குறைந்து, 2,226.45 மில்லியன் டால ராக (சுமார் ரூ.20,825.01 கோடி) வீழ்ச்சி யடைந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் இது 2,448.53 மில்லி யன் டாலராக (சுமார் ரூ.20,952.26 கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆபரணங்களின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் இறக்கு மதி வரிகள் குறித்த தெளிவான முடிவு இன்னும் வராததால் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஏற்றுமதிப் பாதிப்பை ஈடுகட்ட, 2026ஆம் ஆண்டில் உள்நாட்டு ஆபரண விற்பனையை 15% வரை அதி கரிக்க இந்திய ரத்தினங்கள், ஆபர ணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.