முந்தய பக்கம்

தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம்

10 Jul 2026, 9:49 pm
தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம்

தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம்

விழுப்புரம், ஜூலை 10 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் ‘தீக்கதிர்’ சந்தா சேர்ப்பு இயக்கம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தண்டராம்பட்டு வட்டம், கடப்பன் குட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆர்வத்துடன் முன்வந்து ‘தீக்கதிர்’ சந்தாவை வழங்கினர். இதனை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார நிர்வாகி ஆர். அண்ணா மலை மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இந்த சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வானூர் வட்டக் குழுவின் சார்பில் கிளியனூர் பகுதியில் நடைபெற்ற சந்தா பதிவு இயக்கத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணி, வட்டச் செயலாளர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் தீவிரப்படுத்தினர். இவர்களுடன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி. அர்ச்சுணன், எம்.கே. முருகன், வட்டக் குழு உறுப்பினர் ஐ. சேகர் மற்றும் கிளைச் செயலாளர் பி. ஆதிமூலம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சந்தாக்களைச் சேகரித்தனர். உழைக்கும் மக்களின் குரலாக விளங்கும் ‘தீக்கதிரை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இரு மாவட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த இயக்கத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram