தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Jun 2026, 9:34 pm

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

சமையல் எரிவாயு விலை உயர்வு வெறும் இரண்டு ரூபாயில் தொடங்கியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இந்த உயர்வு தொடர்ந்து அதிகரித்து, இன்று விலை ரூ.1000-ஐ நெருங்கி வருகிறது. இவை அனைத்தும் சாதாரண மக்களின் நிதி நிலைமையிலும், அன்றாட வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பத்திரிகையாளர் ரோகினி சிங்

கரப்பான் பூச்சிகளின் போராட்டம் போரட்டம் தான் இந்தியாவிற்கு எப்படிப் போராட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது வரலாற்று ரீதியாக நேர்மையற்றதாகும். இதற்கு முன்பும் கூட, மோடி அரசுக்கு எதிராக சிஏஏ-என்ஆர்சி, விவசாயிகளின் இயக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஆகியவற்றிற்காக இந்தியர்கள் வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர்.

பத்திரிகையாளர் பமீலா பிலிபோஸ்

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் உயிரிழந்தவர்களில் பாதியளவு பேருக்கு மருத்துவ நிபுணரின் உதவியோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. உண்மையில் சமூகத்தின் மற்றொரு பாதியினர் இப்படித்தான் இறக்கிறார்கள். இதைப் பற்றி நாம் எப்போதாவது கவலைப்படுகிறோமா?

முன்னாள் ஒன்றிய அரசு அதிகாரி ஜவஹர் சர்க்கார்

நாட்டில் மோடியின் தலையீடு இல்லாத திட்டம் உள்ளதா? அதானியின் முதல் துறைமுகமான முந்த்ராவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக, மோடி முதலமைச்சராக இருந்தபோது சராசரியாக ஒரு சதுர மீட்டருக்கு வெறும் 15 ரூபாய் என்ற விலையில் 5,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இபொழுது நிலைமை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்?