முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

29 Oct 2026, 9:39 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய மாணவர் சங்கம்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியிலிருந்து விளிம்புநிலை மாணவர்கள் ஓரங்கட்டப்படுவதற்கு எதிராக எஸ்எப்ஐ தொடர்ந்து போராடும். சலுகை பெற்ற பிரிவினரின் ஆதிக்க மையமாக மாறி, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மாணவர்கள் நுழைய முடியாத இடமாக ஜே.என்.யு மாறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

டிஜிட்டல் கைது மோசடி செய்வோருக்கு சட்டத்தில் இடமிருந்தால் விசாரணைக்கு முன்பே தண்டனை தர வேண்டும். மூத்த குடிமக்களை குறிவைக்கும் டிஜிட்டல் கைது மோசடி இரக்கமற்ற குற்றம். டிஜிட்டல் கைது வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுகளை கூட ரத்து செய்யலாம்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பாஜக ஏன் 2 எம்எல்சி இடங்களிலும் தோற்றது; ஆர்எஸ்எஸ் கோட்டையான நாக்பூரில் பாஜகவை காங்கிரஸ் எவ்வாறு வீழ்த்தியது என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். வாரணாசி, நாக்பூர் முதல் லக்னோ, அலகாபாத், பாட்னா வரை மக்கள் எம்எல்சி மூலம் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகத் தெளிவாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க வாக்காளர்கள் என்ன பரிசோதனை எலிகளா? எஸ்ஐஆர் மூலம் 92 லட்சம் மக்கள் முரண்பாடு உள்ளவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்களில் 27 லட்சம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது; வாக்களிக்கும் உரிமையை பறிப்பது எப்படி இடைக்கால நடவடிக்கையாக இருக்க முடியும்?

Share
FacebookXWhatsAppTelegram