முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 Jun 2026, 8:24 pm
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் பி. கே. ஹரிபிரசாத்

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார, தேசபக்தி அமைப்பாகக் காட்டிக் கொள்கிறது. எனவே அது முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால், அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர்தான் தீர்மானிக்க வேண்டும்.

யூடியூபர் துருவ் ரதி

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடியோ இதுகுறித்து முற்றிலும் மௌனம் காக்கிறார். தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஒரு இரங்கல் வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை.

பத்திரிகையாளர் சபா நக்வி

உக்ரைன் விவகாரத்திற்காக உலகக்கோப்பை கால்பந்து விளையாட ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா என்ற நாடு வெனிசுலா, ஈரானில் என்ன செய்தது? இது போர் இல்லையா? அமெரிக்காவிற்கு தனியாக என்ன சர்வதேச சட்டம் உள்ளது?

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

வேட்புமனுவை இழந்த மீனாட்சி நடராஜன் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால், இத்தகைய வழக்குகள் முடிவுக்கு வர இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம், அதன்பிறகு மேல்முறையீடுகளும் இருக்கும். அதற்குள் மாநிலங்களவை பதவிக்காலமே முடிந்துவிடக்கூடும்.

Share
FacebookXWhatsAppTelegram