தீக்கதிர் முக்கிய செய்திகள்
23 Jun 2026, 9:00 pm

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

மோகன் யாதவ் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் அல்ல. அவர் ஒரு நில அபகரிப்பாளர். நில மாபியா கும்பல் போன்று ஒரு நகரையே விலைக்கு வாங்கியுள்ளார். இன்னும் 10 வருடம் அவர் முதலமைச்சராக இருந்தால் அதானி, அம்பானிக்கு நிகராக பெரிய தொழிலதிபராக மாறிவிடுவார்.

கல்வியாளர் விகாஸ் திவ்யாகீர்த்தி

மாணவர்களே! ஒரு சாதாரண திருடன் உங்களுடைய கடிகாரம், அலைபேசி, பை, தங்கச் சங்கிலி, பணத்தைத் திருட முடியும். ஆனால், ஒரு அரசியல் திருடன் உங்களுடைய எதிர்காலம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் உங்களுடைய வேலைவாய்ப்பைத் திருட முடியும். எனவே, கல்வியறிவு பெறுங்கள், விழிப்புணர்வுடன் இருங்கள், புத்திசாலித்தனமாக இருங்கள்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட நபர்களால் தான், ராமர் கோவிலில் நடத்தப்பட்ட வெட்கக்கேடான கொள்ளை நடந்துள்ளது. மோடியால் நியமிக்கப்பட்ட நபர்கள் இந்தத் தடையற்ற கொள்ளையின் மூலம் அனைத்து பக்தர்களையும் ஏமாற்றியுள்ளனர். அதனால் இந்த கொள்ளைக்கு பிரதமர் மோடியே பொறுப்பாவார்.

நாகா மாணவர் முன்னணி

மோடி யோகா தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில், யோகா எப்படி செய்ய வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு நேரடியாக சொல்லி கொடுத்தார். அதே போல நீட் தேர்வு எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லி கொடுத்திருந்தால், முறைகேடு நடந்து இருக்காது. மாணவர்களும் தற்கொலை செய்திருக்க மாட்டார்கள்.