தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 Jul 2026, 9:33 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஊழல் தடுப்பு சோதனை ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்

சென்னை, ஜூலை 12 - அரசு அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோத னையில், ஒரு வாரத்தில், 22.33 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஜூலை 4 முதல் 10 ஆம் தேதி வரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத, ரூ.12.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாநில எல்லைகளில் நடத்திய சோதனையில், ரூ.9.87 லட்சம் என மொத்தம் ரூ.22.33 லட்சம் கைப்பற்றப்பட்டது. லஞ்சம் பெற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்” என கூறப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய திட்டம்

சென்னை, ஜூலை 12 - எரிவாயு சிலிண்டர் மற்றும் பொருட்களின் விலை யேற்றம் காரணமாக தமிழகத்தில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டுள்ள நிலை யில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) ரூ.99-க்கு சிக்கன் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த கழகத்தின் இயக்குநர் ஜெய சீலன் கூறுகையில், “சுற்றுலா வளர்ச்சி கழக உண வகங்களில் 99 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி அறிமுகம் செய்யப்படுகிறது. கத்தரிக்காய் கிரேவி, தயிர் வெங்கா யத்துடன் இணைந்து 450 - 500 கிராம் சிக்கன் பிரி யாணி வழங்கப்படும். சுற்றுலா வளர்ச்சி கழக உணவகங் களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும், மலிவான விலையில் தரமான உணவை வழங்குவதையும் நோக்க மாக கொண்டு இந்த சலுகை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, குறிப்பிட்ட சுற்றுலா வளர்ச்சி கழக உண வகங்களில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, மற்ற உணவங்களுக்கும் விரிவுபடுத்தப் படும்” என்றார். முதற்கட்டமாக ஓசூர், ராணிப்பேட்டை, ஊட்டி, கோவை, கொடைக்கானல், சிதம்பரம் மற்றும் திருநெல் வேலியில் உள்ள 21 உணவகங்களில் 99 ரூபாய் பிரி யாணித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நத்தம்பட்டி அருகே கார் விபத்து: 3 பேர் பலி; 6 பேர் காயம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 12 - விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் பாலத்தில் மோதி விபத்துக் குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். வத்திராயிருப்பைச் சேர்ந்த 9 பேர், மருதங்குடி கோவி லில் சாமி தரிசனம் செய்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நத்தம்பட்டி பாலம் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பூபதிலிங்கம் மற்றும் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். பலத்த காயமடைந்த அங்காள ஈஸ்வரி, திரு வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மேலும் சேர்வை ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீர லட்சுமி, தனலட்சுமி, காவியா, அஸ்வின் மற்றும் லட்சுமி ஆகியோர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை உட்கோட்ட காவல் துணைக் கண்கா ணிப்பாளர் பாலசுந்தரம் பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌ தம் கோயல் ஆகியோரும் நேரில் ஆய்வு மேற்கொண் டனர். நத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஓடி ஒளியவில்லை; ஜூலை 15-இல் ஆஜராவேன்: எ.வ.வேலு

சென்னை: வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய மறுநாளே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றது குறித்து, “வெளி நாட்டில் போய் ஒளிந்து கொண்டார்” என்று கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் பதில் கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், “2016 முதலே சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயச் சிகிச்சை பெற்று வருகிறேன். ஜூன் 15-லேயே விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டேன். சோதனை நடந்த அன்று அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, திட்டமிட்டபடி சிகிச்சைக்காகச் சென்றேன். அதற்கான மருத்துவ ஆவணங்கள் என்னிடம் உள்ளன. நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை; அது திமுகவினரின் பழக்கமும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாத நான், ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஆஜராவேன்” என்று தெரிவித்தார்.

குருகுல கல்வி அமல்படுத்தாததால் கவலையாம்: அர்லேகர் சொல்கிறார்

சென்னை: சென்னை அரும்பாக்கம் டிபி வைஷ்ணவ் கல்லூரியின் 59-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பாரம்பரிய கல்வி முறை குறித்துப் பேசினார். கல்வி என்பது வெறும் சமூக வெற்றியோடு நிற்காமல், தேசக் கட்டமைப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர் களின் பண்பு நலன்களை மேம்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது என்றார். அதன் நன்மைகளை முழுமையாக ஆராயாமல் தமி ழகத்தில் அதனை அமல்படுத்தாமல் இருப்பது கவ லையளிக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய குருகுல கல்வி முறை, இங்கிலாந்தில் ‘மதராஸா கல்வி முறை’ என்ற பெயரில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என ஆளுநர்

பெங்களூரு குடிநீர் பிரச்சனை: தேவகவுடா திடீர் கவலை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திரு நள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தரிச னம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, காவிரி நீர் பிரச்சனை குறித்துக் கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அரசியல் ரீதி யாக எதிரெதிராக இருந்தாலும், காவிரி நீர் பிரச்சனை என்று வரும்போது ஒன்றுபட்டு உறுதி யான நிலைப்பாட்டை எடுக்கின்றன. கர்நாடகா வில் நாங்கள் பாசனத்திற்காகத் தண்ணீர் கேட்க வில்லை, குடிநீருக்காக மட்டுமே கேட்கிறோம். எனவே, தமிழக முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் என அனைவரும் பெங்களூரு, சிக்மகளூர், கோலார் போன்ற பகுதிகளுக்கு நேரில் வந்து, அங்கு நிலவும் கடு மையான குடிநீர் பிரச்சனையை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சர்வதேச செஸ் போட்டி: தமிழக வீரர் சாம்பியன்

சென்னை, ஜூலை 12- பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 6 ஆவது லா பிளாக்னே ஓபன் சர்வ தேச செஸ் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனி யன் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்றி யுள்ளார். 20 நாடுகளைச் சேர்ந்த 13 கிராண்ட் மாஸ்டர்கள், 22 சர்வ தேச மாஸ்டர்கள் உள்ளிட்ட 142 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற் றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டி யில் இனியன், 6 வெற் றிகள், 3 டிராக்களுடன் 7.5 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தட்டிச் சென் றார். இந்த ஆண்டில் இனியன் வென்ற 3 ஆவது சர்வதேச பட்டம் இதுவாகும்.

5 ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை, ஜூலை 12 - திருப்பதி - புதுச்சே ரிக்கு ஜூலை 13, 14, 15, 17, 18, 25, 29 ஆகிய தேதிகளில் காலை 4.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (16111), முண் டியம்பாக்கம் - புதுச் சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மேற்படி தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66052), புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையே பகுதி ரத்து செய் யப்பட உள்ளது. ஜூலை 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில் (66046), விழுப்புரம் - முண்டி யம்பாக்கம் இடையே பகுதி ரத்து செய்யப்படு கிறது. தாம்பரம் - விழுப்பு ரத்துக்கு மேற்படி தேதி களில் காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (66045), முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படு கிறது. புதுச்சேரி - திருப்பதிக்கு ஜூலை 13, 14, 15 ஆகிய தேதி களில் பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட வேண் டிய மெமு ரயில் (16112) ஒரு மணி நேரம் தாமத மாக பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.