முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 May 2026, 8:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

கடந்த ஓராண்டில், இந்திய ரூபாய் பாகிஸ்தான் ரூபாய்க்கு எதிராக கிட்டத்தட்ட 12% அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர்நிறுத்தத்தை அறிவித்த காலத்துடன் இது ஒத்துப்போகிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா

கச்சா எண்ணெய் விலைகள் குறைவாக இருந்தபோது, எரிபொருள் விலை குறைக்கப்பட்டதா? இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் லாபங்களில் கொழித்தன. பிரதமர் பாராட்டினார். இப்போது சர்வதேச நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. நஷ்டத்தை ஏற்று, விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களிடம் பிரதமர் சொல்லலாமே?

எழுத்தாளர் தாரா கிருஷ்ணசாமி

‘ஊடகச் சந்திப்புகளை விஜய் நடத்த வேண்டும்’ எனப் பதிவிட்டதற்கு, ‘12 வருடங்களாக மோடியே ஊடக சந்திப்பு நடத்தாத நிலையில், விஜய் மட்டும் ஏன் நடத்த வேண்டும்’ என தவெக ஆதரவாளர்கள் கேட்கின்றனர். தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் போலி சான்றிதழ்கள், போலி கல்வித் தகுதி போன்றவற்றுக்கும் இதே கேள்வி பொருந்தும் என்பதுதான் துயரம்!

பத்திரிகையாளர் சௌரவ் தாஸ்

அவசரமான காரணங்கள் இருந்தும் உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை. காலித்திற்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்படாததை உச்சநீதிமன்றம் நேற்றுதான் (மே 18)கடுமையாகக் கண்டித்திருந்தது. ஆனால் இன்றோ, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி அந்தத் தீர்ப்பைத் தன் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்திருக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram