முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

27 Jun 2026, 8:15 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இந்திய இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தொடர் மறு தேர்வுகள், பணியாளர் நியமனத்தில் தாமதம், காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, அதிகரிக்கும் கல்விச் செலவு ஆகியவை நமது இந்திய இளைஞர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்

விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகன் தான் என்று இந்திய அரசு முழுமையாகத் திருப்தி அடைந்த பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாகக் கருத்துத் தெரிவிப்பது தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதோடு, அரசின் சொந்த சரிபார்ப்பு நடைமுறைகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தும்.

அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ்

அன்று அவசரநிலையை ஆதரித்துப் பேசிய வர்களுக்கு, இன்று ஜனநாயகத்தின் பெயரால் பேசுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை. அதே சமயம், இன்று ஜனநாயகம் தினந்தோறும் சிதைக்கப்படும் போது மவுனம் காப்பவர்கள், அன்று நாங்கள் அவசரநிலையை எதிர்த்தோம் என்று உரிமை கொண்டாட முடியாது.

ஜாமியா ஊடகம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு உணவு, தின்பண்டங்கள், குடிநீர் மற்றும் இதர தளவாட ஏற்பாடுகளுக்காக மட்டும் சுமார் ரூ.46.31 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆவணங்கள் காட்டுகின்றன. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை யும் பாஜகவினர் ஆக்கிரமித்து வருகின்றனர்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram