முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Jun 2026, 8:28 pm
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

1999 தூதரக குண்டுவெடிப்புக்குப் பிறகு அமெரிக்காவிடம் சீனா நடந்துகொண்டதைப் போல, வளைகுடாவில் இந்திய மாலுமிகளின் மரணங்களுக்கு இந்தியாவால் எதிர்வினையாற்ற முடியுமா? சுருக்கமாகச் சொன்னால், மோடியின் தலைமையின் கீழ், முடியாது.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

ஆர்எஸ்எஸ்-க்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்றால், தனக்கு வருகின்ற நிதி ஆதாரங்களை ஏன் அவர்கள் வெளிப்படுத்தக்கூடாது?

எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி

டெலிகிராம் தடை என்பது திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவனின் வீட்டிற்குப் பூட்டுப் போடுவது போன்றது. லட்சக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகளாக டெலிகிராமில் படித்து வருகிறார்கள். குறிப்புகள், தேர்விற்கான தயாரிப்புகள் என அனைத்தும் அங்குதான் நடக்கின்றன. அந்த வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்குத் தீர்வாகும்?

திரிணாமுல் எம்.பி., சகாரிகா கோஷ்

மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல. பாஜக வெற்றி பெற்ற 105 தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, அக்கட்சியின் வெற்றி வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இதில் சுமார் 86 தொகுதிகள், இதற்கு முன் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாத தொகுதிகளாகும்.

Share
FacebookXWhatsAppTelegram