தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Jun 2026, 9:40 pm

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

சென்னை: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடை பெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதிசெய்த பிரக்ஞானந்தா, இதே தொடரில் நடப்புச் சாம்பி யன் மாக்னஸ் கார்ல்செனை இருமுறை தோற்கடித்ததோடு, தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தார். இந்தச் சாதனையையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துப் பதிவில், “அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கும் இந்தியா விற்கும் பெருமை சேர்த்த இவர் புதிய சாதனைகள் படைத்திட என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்திடுக! சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத் தோடு இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பி.செல்லத்துரை, பொதுச் செயலாளர் ஏ.ஜெசி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் 44 ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பல ஆண்டுகளாக 60 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாண வர்களுக்கு உணவு சமைத்து தடையின்றி வழங்கவும், பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும் ஏதுவாக காலை உணவு திட்டத்தையும், அங்கு பணியாற்றும் ஊழியர்களை யும் சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும். 40 ஆண்டு களுக்கும் மேலாக போராடி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் காவல் நடை ரோந்து! டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மாநிலம் முழுவதும் தினமும் ஒரு மணி நேரம் காவல் நடை ரோந்து நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். கஞ்சா புழக்கம், வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங் கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கை யின் முதன்மை நோக்கம் என காவல்துறை உயர் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். குற்றம் நடைபெறும் இடங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று மக்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு சார்ந்த சவால்களை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுக்க இந்த நடைரோந்து உதவும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஏர்வாடி அருகே கார்-பைக் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்த லாடசாமி, அவரது மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழி யாக ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏர்வாடி அருகே கொம்பூதி சாலை பகுதியில் வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப் பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், பைக்கில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம் மற்றும் புல்லாணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல்துறை யினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரி ழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக இராம நாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் கண்ணாடி பாலத்தை பார்க்க பணம் வசூல்? திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு

சென்னை: கன்னியா குமரியில் ரூ.49 கோடி யில் தமிழ்நாடு அரசு அமைத்த கண்ணாடிப் பாலத்தைக் காண, ‘விவே கானந்தா கேந்திரா’ அமைப்பு மக்களிடம் தலா ரூ.30 வசூலிப்பதை உட னடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், முன்னாள் முதல மைச்சர் கலைஞரால் திறக்கப்பட்ட, 133 அடி உயரமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சிலை யின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி யுடன் சில செயல்பாடுகள் நடக்கின்றன. கரையிலிருந்து சிலைக்கு நேரடியாக இருந்த படகுப் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, தற்போது படகுத் துறை யும் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் சிலைக்குச் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் முதலமைச்சரும், பொதுப் பணித் துறையும் கண் ணாடிப் பாலக் கட்டண வசூலைத் தடுத்து, அதன் பராமரிப்பை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் தவெகவில் இணைந்தனர்

சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலை யில், சனிக்கிழமை (ஜூன் 6) சென்னை பனையூ ரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதா கிருஷ்ணன், சிவபதி ஆகியோர் தங்கள் ஆதர வாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சதன் பிரபாகர் உள்ளிட்டோரும், திமுக முன்னாள் எம்எல்ஏக் களான தாரமங்கலம் காமராஜ், போரூர் எஸ்.எம். சண்முகம் மற்றும் அமமுகவைச் சேர்ந்த இராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மு. முருகன் உள்ளிட்ட பலரும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், அர்ஜுனா, மரிய வில்சன் ஆகி யோர் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது!

மு.க.ஸ்டாலின் விமர்சனம் சென்னை, ஜூன் 6 - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பிற கட்சியினர் இணையும் விழா வில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரை யாற்றினார். வழக்கமாக சுயலாபத்திற்காகவே பிற கட்சியினர் ஆளுங்கட்சியில் சேர்வர். ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலும் பிற கட்சியினர் இணைந்திருப் பது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார். ஆட்சியை விட ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் எதிர்த்தார் என்றும், திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனை வரும் உணர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நிறுத்தம் விவகாரம்: உத்தரவு ரத்து

சென்னை, ஜூன் 6 - ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணை யம் 2024 ஜனவரி 22 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கிய பிறகு அதை தடுக்க முடியாது என்று தெளிவு படுத்தியது. மேலும் கோயம்பேடு, போரூர், சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானா பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ள ஆம்னி பேருந்துகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. கட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் மோட்டார் வாகன சட்டப்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு ஒப்புதல் கோரி மாநில போக்குவரத்து ஆணையத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரிக்க ஆளுநரிடம் அனுமதி கோரியது தமிழக அரசு

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க முறையான அனுமதி கோரி தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு அதிகாரப்பூர்வமாக கோப்பு அனுப்பி யுள்ளது. முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்த உடனேயே கோப்பு ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத் தில் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரி மாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் குற்றம் நடந்ததாகக் கூறப்படுவதால், விசாரணைக்கான இறுதி அனு மதி வழங்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது. ஆளுநர் அனுமதி வழங்கும் பட்சத்தில் அரசாணை விரைவில் வெளியிடப்ப டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து சட்ட அம்சங்களையும் முறையாக ஆய்வு செய்த பின்னரே இந்தக் கோப்பு ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.