முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 hour before
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன்

அயோத்தி ராமர் கோவில் மோசடி வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். கோவிலின் பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்திய பிரதமர் மோடி, இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டவர்கள், மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த பிறகு, தில்லி ஜந்தர் மந்தரில் இருந்த சுகாதார வசதிகளை காவல்துறை துண்டித்துள்ளது. சோனம் வாங்சுக்கின் வயது, அவரது உடல்நலக் குறைபாடுகள் குறித்து காவல்துறையிடம் பலமுறை எடுத்துரைத்து, கோரிக்கை விடுத்தும் அவர்கள் எதற்கும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

இஸ்ரேலின் ராணுவத்தின் மனிதநேயமற்ற தாக்குதலால் காசா உருக்குலைந்துள்ளது. காசா தற்போது திறந்தவெளிச் சிறை போல உள்ளது. உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை என்றால், வெகுவிரைவில் ஒரு பொதுமயானமாகவும் கூட காசா மாறும் சூழல் ஏற்படும்.

நாகா மாணவர் முன்னணி

பொதுவாக ஒரு மத ஊர்வலம் நடந்தால், மற்ற மதத்தினர் தண்ணீர், பிஸ்கட் கொடுப்பார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் விஷ மாத்திரை கொடுத்துள்ளார்கள். மோடியின் தலைமையில் நாடு எங்கு செல்கிறது என்று நாம் கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram