முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

yesterday
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

கோவில்களை குறிவைத்து, ஒரு வணிக மாதிரியை உருவாக்கி பாஜக - ஆர்எஸ்எஸ் பகற்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இது ராமர் கோவில் மூலம் அம்பலமாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை ராமர் கோவில் அறக்கட்டளை அவமதித்துள்ளது. சங்கராச்சாரியார்கள் மற்றும் நற்பெயர் கொண்ட நபர்களை உள்ளடக்கிய புதிய அறக்கட்டளையை அமைக்க வேண்டும்.

கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வரு கிறது. அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானவை. ஜூலை 20ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ எந்த நேரத்திலும் நாங்கள் கைது செய்யப்படலாம்; அநேகமாக அது என்எஸ்ஏ அல்லது உபா சட்டங்களின் கீழ் இருக்கலாம். ஆனால், அதற்கான விலையைத் தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

மும்பை புறநகர் ஆட்டோ ஓட்டுனர்கள் சம்மேளனம்

மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ (1988) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற ஷபிக் சையத், தற்போது பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். வளரும் மற்றும் சாதனை இந்தியாவிற்கு இதுவும் எடுத்துக்காட்டு.

உச்சநீதிமன்றம்

குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை முடிவு செய்யும்போது “நேர்மையான, சட்டப்பூர்வமான, நியாயமான” முறையில் இருக்க வேண்டும். அதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 பேரை ‘வெளிநாட்டவர்கள்’ என அறிவித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். 27 பேரும் இந்தியர்கள் தான்.

Share
FacebookXWhatsAppTelegram