தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்ததை வரவேற்கிறேன். அதே போல பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் தனியான தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும்.

சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே

சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த, மத்தியப்பிரதேசத்தின் பாலகாட் பழங்குடியின கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயை நேரில் ஆய்வு செய்தேன். மிக மோசமான நிலையில் இருந்தது. அம்மாநில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவர்களுடைய சொந்தக் குழந்தைகளுக்கு இந்த நீரை குடிக்க கொடுப்பார்களா?

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்

கோவாவில் காங்கிரசும் பாஜகவும் ரகசியக் கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கட்சித் தாவலால் பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

ராஷ்டிரிய ஜனதா தளம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளிதழ்களில் தில்லி பாஜக அரசு பெரியளவில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் விநாயகரை விட பிரதமர் மோடி, தில்லி பாஜக அமைச்சர் பெரிதாக உள்ளனர். கடவுளுக்கு வந்த சோதனை இது.