தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Sept 2026, 9:23 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

வீட்டில் மவுனமாக முடங்கிக் கிடப்பதை விட, வீதியில் இறங்கிப் போராடுவதே சிறந்தது என்று நாட்டின் பெரும்பாலான குடிமக்கள் முடிவெடுக்கும் போது என்ன நடக்கும்? என்பதை மோடி அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால், மக்கள் போராட்டம் ஒரு நாட்டின் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்திவிடும்.

எழுத்தாளர் சஞ்சய் ஜா

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம் முதலில் அறிவிக்கப்பட்டபடி 7.8% ஆக இல்லாமல், 6.9% ஆகக் குறைந்திருந்ததுதான் உண்மையென்றால்... பொருளாதார நிபுணர்கள் போல வேடமிடும் வலதுசாரி வித்தைக்காரர்கள், 2025-26 நிதியாண்டின் முழுமையான வருடாந்திர ஜிடிபி வளர்ச்சி எவ்வளவு என்று சொல்லத் திராணி இருக்கிறதா?

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

இந்தியாவின் முக்கிய விருப்பங்களும், உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே உள்ள பொதுவான கவலைகளும் தில்லி பிரிக்ஸ் மாநாட்டின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை மட்டுமே இறுதியான சொல் அல்ல; இதற்கு அப்பாலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) ஐடி விங்

மசூதி, பள்ளிவாசல்களை இடிக்க தைரியம் இருக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசுகளுக்கு சாதாரண பெண் பத்திரிகையாளர்களின் விமர்சன செய்திக்கு அஞ்சி அவர்களை கைது செய்கிறது. பாஜக என்பது ‘பயம் உள்ள பிம்பம்’ தான். அரசு அதிகாரம் இருப்பதால் பலம் வாய்ந்தவர்கள் போன்ற பிம்பத்தை வெளிப்படுத்தி வருகிறது.