முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

43 minutes before
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.கே.சைலஜா

காலடி பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு (தேர்வு எழுத அனுமதி) வரவேற்கத்தக்கது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதத் தகுதியில்லை என்ற பல்கலைக்கழகத்தின் விசித்திரமான, மாணவர் விரோத நிலைக்கு உச்சநீதிமன்றத்தின் குட்டு காலடி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

பீகாரில் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய சந்தன் திவாரி, அபிஷேக் திவாரி உள்ளிட்டோர் 44,000 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தச் சதி திட்டமிட்டிருந்தார்களா என்ற சந்தேகமும் தீவிரமாக எழுந்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏன் அறிவிக்கக் கூடாது?

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

அன்று நிதிஷ் குமார் உடல்நலம் குறித்து பாஜகவினர் பேசி, அவரிடம் முதலமைச்சர் பதவியை பறித்தார்கள். ஆனால் இன்று அமித் ஷா, நிதிஷ் குமாரை விட மிக மோசமான அளவில் உடல்நலம் குன்றியிருப்பது போல் பேசி வருகிறார். அவரது செயல்பாடு கூட பதற்றமாகவே உள்ளது. பாஜகவினர் என்ன செய்யப் போகிறார்கள்?

யுவ தேசம் ஊடகம்

மோடி வெளிநாடு செல்லாத நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைகிறார்கள் அல்லது அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை மேற்கொள்கிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குழப்பம் நீடிக்கிறது. இது எப்படி?

Share
FacebookXWhatsAppTelegram