தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Jun 2026, 8:24 pm

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

உலகமே இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் நிலையில், பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பதன் மூலம் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு உதவுகிறாரா? அவருக்கு தாய்நாட்டை விட தந்தை நாடு முக்கியமாகிவிட்டதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இந்திய நலன்களை பாதுகாக்க மோடி தவறிவிட்டார்.

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அடுத்த நாளே நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இன்று அதானிக்கு ஆதரவாக வேதாந்தா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்சு

முக்கிய தலைவர்கள் பலர் திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். பாஜகவின் மிரட்டல்

மற்றும் மத்திய அமைப்புகளின் நெருக்கடிக்கு அக்கட்சியினர் பயப்படுகிறார்கள். இதனால்தான், மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் தப்பியோடுவதைப் போல, திரிணாமுல் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறுகிறார்கள்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்துவதற்காக நான் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளேன். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் அமைதி போராட்டத்தில் இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.