தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Jun 2026, 9:18 pm

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

முழு லெபனானும் எரிய வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சர் பென் க்விர் கூறுகிறார். தங்கள் ரத்தவெறியை வார்த்தைகளால் மறைக்காமல் இஸ்ரேல் வெளிப்படையாகவே அதை காட்டியுள்ளது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

ஒரு காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் மிகவும் நம்பகமான கூட்டணி நாடாக இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை இப்போது சிதைந்துவிட்டது. தற்போதைய சீர்குலைவு என்பது ஒரு தனிப்பட்ட ஜனாதிபதி ஆட்சியுடன் தொடர்புடையதாக மட்டும் இல்லாமல், அமெரிக்காவின் நடத்தையில் ஏற்பட்ட ஒரு நிரந்தரமான கட்டமைப்பு மாற்றமாக இருந்தால் என்ன செய்வது?

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

ஒன்றிய அரசின் விளம்பர முகமை கடந்த ஐந்தரை ஆண்டுகளில் தொலைக்காட்சி, வானொலி, அச்சூடகம் (Print), விளம்பரப் பலகைகள் (Hoardings) மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள 2,586 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுள்ளது.

பத்திரிகையாளர் முகமது ஜுபைர்

யூடியூப், ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, மெட்டாவின் இசை நூலகம் ஆகியவை, வெளிப்படையாக வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பாடல்கள் உட்பட, வெறுப்பு நிறைந்த இந்துத்துவா இசையை இந்தியாவில் ஊக்குவித்து, அதன் மூலம் லாபம் ஈட்டுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.