முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

31 Oct 2026, 8:52 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

தில்லி ராம் லீலா மைதானத்தில் நவ. 1 அன்று நடைபெறும் ‘இந்தியா’ அணியின் பேரணி, மோடியின் அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் பலமான எச்சரிக்கையாக அமையும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் வரை மக்கள் போராட்டக் களத்திலேயே நிலைத்து நிற்பார்கள்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி

தில்லி முஸ்தபாபாத் தொகுதியில் வாக்காளர் பெயர் நீக்கம் கோரி படிவம் 7 அதிகளவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 68% படிவங்களை பாஜக முகவர்களே சமர்ப்பித்துள்ளனர். காரணம் எதுவும் பாஜக முகவர்கள் வழங்கவில்லை. தேர்தல் ஆணையமும் கேள்வி கேட்கவில்லை.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

“போராடுபவர்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்களுக்கு அரசு வேலை கிடையாது” என உ.பி. பாஜக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற எண்ணத்திலேயே அஞ்சி நடுங்கும் ஒரு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரான விதிகளே இந்த சட்டமாகும்.

சிவசேனா (உத்தவ்) கட்சி

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பாஜக 5 இடங்களில் 3 இடங்களை இழந்தது. அதே போல பீகாரில் 8 இடங்களில் 5 இடங்களை இழந்தது. உ.பி.யில் சமாஜ்வாதியை விட ஒரு இடம் மட்டுமே பாஜகவிற்கு வித்தியாசம். இந்தமூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான் உள்ளது. சட்டமேலவை தேர்தல் மூலம் கடுமையான அதிருப்தி அலைஒன்று அமைதியாக வெடித்துக் கிளம்பியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram