தீக்கதிர் செய்தி எதிரொலி தண்டரை கிராமத்தில் புதிய மின்கம்பம் நடப்பட்டது
1 Jul 2026, 12:30 am
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி தண்டரை கிராமத்தில் புதிய மின்கம்பம் நடப்பட்டது</strong></p><p>விழுப்புரம், ஜூன் 30 - விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி மின்சார அலுவலகப் பிரிவிற்கு உட்பட்ட தண்டரை கிராமத்தில், கடந்த 25 நாட்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த மின்சார விநியோகம், ‘தீக்கதிர்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. தண்டரை கிராமத்தில் உள்ள மின்மாற்றி-3-ல் மின்கம்பம் உடைந்ததால், கடந்த 25 நாட்களாக மின்சாரம் தடைபட்டிருந்தது. இதனால் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்கள் கருகும் நிலையில் இருந்ததால் மிகுந்த அவதிக்குள்ளாகியிருந்தனர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டரை கிளை நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புதிய மின்கம்பம் அமைக்க வலியுறுத்தினர். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 27-ம் தேதி ‘தீக்கதிர்’ நாளிதழில் இது குறித்த செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் ஜூன் 29-ம் தேதி மாலை நேரில் வந்து, போர்க்கால அடிப்படையில் புதிய மின்கம்பத்தை நட்டு, மின் இணைப்பை வழங்கினர். தங்கள் துயரத்தைப் பிரதிபலித்து, அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்ற நாளித ழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதி காரிகளுக்கும், உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தண்டரை கிளை நிர்வாகிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்</p>
