தீக்கதிர் செய்தி எதிரொலி எம்.ஜி.ஆர். சாலை சீரமைப்பு
29 Oct 2026, 9:09 pm

தீக்கதிர் செய்தி எதிரொலி எம்.ஜி.ஆர். சாலை சீரமைப்பு

விருதுநகர், அக்.29-விருதுநகரில் குண்டும் குழியுமாகக் காணப்பட்ட எம்.ஜி.ஆர். சாலை, தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டது.

விருதுநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். சாலை, கடந்த மார்ச் மாதம் ரூ.1.34 கோடி செலவில் புதுப்பிக்கப்பட் டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை பல இடங்களில்குண்டும் குழியுமாக மாறியது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் அக்.29 ஆம் தேதி விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில், சேதமடைந்த பகுதிகளில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக் கற் கள் கலவை கொட்டப்பட்டு உடனடியாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், எம்.ஜி.ஆர். சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.