முந்தய பக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி: முத்தால் நகரில் குப்பை அகற்றம்

13 May 2026, 12:06 am
தீக்கதிர் செய்தி எதிரொலி: முத்தால் நகரில் குப்பை அகற்றம்
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி: முத்தால் நகரில் குப்பை அகற்றம் </strong></p><p>விருதுநகர், மே 12- விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தால் நகரில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் தீக்கதிர் செய்தியால் அகற்றப்பட்டது. விருதுநகர் அருகேயுள்ளது ரோசல்பட்டி ஊராட்சி. இங்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடு, வீடாக குப்பைகளை வாங்கும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் பொது மக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வரு கின்றனர். இதனை அகற்ற வேண்டுமென பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், “குப்பைகளை அகற்றாத ரோசல்பட்டி ஊராட்சி“என தலைப்பிட்டு தீக்கதிர் நாளி தழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, முத்தால் நகரில் தேங்கிய குப்பை களை ரோசல்பட்டி ஊராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram