தீக்கதிர் செய்தி எதிரொலி சாக்கடை கால்வாய் அடைப்பு நீக்கம்!
17 Jun 2026, 10:17 pm
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி சாக்கடை கால்வாய் அடைப்பு நீக்கம்!</strong></p><p>அவிநாசி, ஜூன் 17- திருமுருகன்பூண்டி நகராட்சி 10-ஆவது வார்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி யில் சாக்கடை தேங்கி சுகாதாரக்கேடு நிலவு வது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து ‘தீக்கதிர்’ நாளி தழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை அடைப்பைச் சுத்தம் செய்துள்ளது. சுகா தாரப் பணியாளர்களை கொண்டு தினமும் இந்த அடைப்பை சுத்தம் செய்ய வேண்டும் என 10-ஆவது வார்டு சிபிஎம் நகரமன்ற உறுப் பினர் சுப்பிரமணியம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
