தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2 Nov 2026, 10:51 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விமர்சனங்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! மு. வீரபாண்டியன்

பேட்டிகோயம்புத்தூர், நவ. 2 –அரசை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளைக் கைவிட்டால் எத்தகைய அரசாக இருந்தாலும் சமரசமின்றி வீதியில் இறங்கிப் போராடுவோம் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாண்டியாறு-புன்னம்புழா நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், முடங்கிக்கிடக்கும் 7 என்டிசி பஞ்சாலைகளை உடனே திறந்து தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவையில் போர்க்காலஅடிப்படையில் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் எனக் கோரிய அவர், எத்தகைய நிர்வாகக் காரணங்களைக் காட்டியும் அரசை விமர்சிப்பவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றார்.நள்ளிரவில் கதவு தட்டும் பாணியை மாநில அரசு பின்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நவ. 3-இல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றார். மேலும், கார்ப்பரேட் நலன் சார்ந்த அரசாக மாறாமல் ஏழைகளின் பக்கம் நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நவ. 10-இல் மக்கள் சாசனக் கோரிக்கை பிரகடனமும், மார்ச் 23-இல் திருச்சியில் இடதுசாரிகளின் பிரம்மாண்ட பேரணியும் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மரபு ஆடைத் திட்டம் தனிநபர் உரிமை மீதான தாக்குதல்தமுஎகச கண்டனம்!

சென்னை, நவ. 2 தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் வாரம் ஒரு நாள் பாரம்பரிய ஆடை அணிந்து வர வேண்டும் என்ற மரபு ஆடைத் திட்டம் தனநபர் ஆடை தேர்வு உரிமையின் மீதான நேரடித் தாக்குதல் எனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர்

வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடை என்பது அவரவர் உரிமை என்றும் அதில் அரசு தலையீடு செய்வது ஜனநா

யக விரோதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களின் வசதிக்கேற்பச் சுடிதார் போன்ற ஆடைகள் பயன்பாட்டில் உள்ள சூழலில், அவர்களைச் சேலை அணியக் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல.எனவே அமைச்சர் அறிவித்துள்ள மரபு ஆடைத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஒன்றிய அரசின் மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்புகளுக்கு எதிராகத் தமிழக அரசு உறுதியாகச் செயல்பட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமுஎகச கேட்டுக்கொண்டுஉள்ளது.

காவல் விசாரணையில் அன்பில் மகேஸ்

சென்னை, நவ.2-தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் காவல் கோரிய மனு திங்களன்று (நவ.2) விசாரணைக்கு வந்தது. புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்பில் மகேஸ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் துறையினர் ஐந்து நாள் அனுமதி கேட்டிருந்த நிலையில் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நவ.2 முதல் நவ.4 வரை அவரைக் காவலில் விசாரிக்கலாம். விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருக்கவும் நீதிபதி அனுமதித்துள்ளார்.

பிஎப் இருப்பை வாட்ஸ்ஆப் மூலம் அறியும் வசதி அறிமுகம்

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ), பிஎப் கணக்கு இருப்பு, கடைசி 5பரிவர்த்தனைகள், பாஸ்புக் பதிவிறக்கம் ஆகியவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அறியும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 87964 41800 என்ற வாட்ஸ்ஆப்

எண்ணுக்கு ‘Hi’ என அனுப்ப வேண்டும். பின்னர் மொழியையும் விருப்பத்தையும் தேர்வு செய்து, ஓடிபி உள்ளீடு செய்தால் இருப்புத் தொகையை அறியலாம்.

கே.என்.நேருவின் மேல்முறையீட்டுமனு தள்ளுபடி

சென்னை: நகராட்சித் துறை நியமன முறைகேடு தொடர்பான லஞ்ச வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும்,விசாரணைக்கு நேரு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினர். இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறை பாதுகாப்புக்கு உயர்நிலைக் குழு

சென்னை: தமிழகச் சிறைகளிலிருந்து கைதிகள் தப்புவது தொடரும் நிலையில், சிறை பாதுகாப்பை ஆய்வு செய்து வலுப்படுத்த முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் அமைத்துள்ளார். தேனியில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு

உள்ளது. சிறைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.

பால் விலை உயரவில்லை! ஆவின் விளக்கம்

சென்னை: பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால் விலை உயர்வு என வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்றும் பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் நலனை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவ.15 வரை புதிய புயலுக்கு வாய்ப்பில்லை

சென்னை: நவ.15 வரை வேறு புயல்கள் உருவாக வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். அர்னாப் புயலின் போது காணப்பட்டகடல் அலை கொந்தளிப்பு, முரசு புயல் நெருங்கும் போது இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.