தீக்கதிர் முக்கிய செய்திகள்தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

கண்ணூர் பல்கலைக்கழக வளாகத்தில் ஐஷி கோஷ் (எஸ்எப்ஐ தலைவர்) கலந்துகொள்ளவிருந்த காரணத்திற்காக, அந்த மாணவர் திருவிழாவையே கண்ணூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தடை செய்தார். அதனால் பாஜக ஆளுநரால் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கல்வித் தகுதிகளை முறையாகச் சரிபார்க்க வேண்டும்.

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

எனது வெளிநாட்டுப் பயணத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றால், இங்கிலாந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அமெரிக்கா செல்வதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டது? அதே போல முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமெரிக்கா, கனடா நாடுகளுக்குச் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டுள்ளார்? இதற்கு பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.

பத்திரிகையாளர் பிரியா சிங்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில சட்டமன்றங்கள் - நாடாளுமன்றம் ஜனநாயக மரபை இழந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடலுக்காக 10 நாள் அவையை மோடி அரசு வீணடித்தது. எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வழங்குவதற்காக தமிழ்நாடு சட்டமன்றமும் அவை காலத்தை வீணடித்துள்ளது.

நாகா மாணவர்கள் முன்னணி

மணிப்பூரில் என்ஆர்சி-ஐ கொண்டுவர பாஜக மாணவர்களை களமிறக்கி போராட வைத்துள்ளது. அவர்கள் ‘மெய்டெய் படை’ என்ற போர்வையில் மணிப்பூரின் பெரும்பாலான நகரில் போராடியுள்ளனர். எல்லா கட்சியிலும் மாணவர்கள் - இளைஞர்கள் உள்ளனர்என்பதை பாஜக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.