முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

29 Jun 2026, 8:40 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி

இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இருப்பதால்தான், நாம் உலகக்கோப்பைக்கு இன்னும் தகுதி பெறுவதில்லை என்று நினைக்க வேண்டாம். உண்மையான பிரச்சனை என்னவென்றால், நாம் இன்னும் ஒரு முழுமையான விளையாட்டு தேசமாக மாறவில்லை. நாம் திறமைகளை மிக ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து வளர்ப்பதில்லை. அதே போல நீண்ட கால வழிகாட்டுதல்கள் நம்மிடம் இன்னும் போதிய அளவில் இல்லை.

ஒய்எஸ்ஆர்சி தலைவர் ஜெகன் மோகன்

ஆந்திராவில் மெகா டிஎஸ்சி என்ற பெயரில் ஆட்சேர்ப்பை நடத்தியுள்ளனர். ஆனால் இது மெகா முறைகேடு என்று தான் கூற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்த ஒவ்வொரு நிறுவனப் பாதுகாப்பு வழிமுறைகளும் தரைமட்டமாக்கப்பட்டு, ரகசியத்தன்மை சமரசம் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார்

நீட் போன்று மகாராஷ்டிராவிலும் ஒரு வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள் ளது. தவறு செய்தவர்்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கடு மையான தண்டனை பெற்றுத்தர அரசு ஒரு தெளிவான வழிகாட்டு தலை உருவாக்க வேண்டும்.

யுவதேசம் ஊடகம்

பாஜக ஆளும் உ.பி.,யில் ஒரு விஷயத்தை நாம் கண்காணிக்க வேண்டும். முஸ்லிம்கள் குற்றத்தை செய்தால் அவர்களை ‘குல்லா’ அணிவித்து காவல்துறை அழைத்துச் செல்கி றது. ஆனால் ராமர் கோவில் முறைகேட்டை அரங்கேற்றிய இந்துத்துவா கும்பலுக்கு முகக்கவசம் அணிவித்து முகத்தை மறைக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram