முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 Jun 2026, 9:10 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் ரவீஷ் குமார்

கொல்கத்தா விமான நிலையத்தில் அயோத்தி ராமர் கோவிலின் படம் பொறிக்கப்பட்ட ஒரு பை ரூ.300-க்கு விற்கப்படுகிறது. மக்கள் தங்கள் நம்பிக்கையின் காரணமாக இதனை வாங்குவார்கள் என்று அதன் தயாரிப்பாளர் நம்பியிருக்கலாம். ஆனால், நம்பிக்கையின் பெயரால் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் காணிக்கைகளின் கதி என்ன?

அமெரிக்க மாடலிங் கேரி ப்ரீஜீன்

ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையையும் இஸ்ரேல் குண்டுவீசிப் படுகொலை செய்துள்ளது. சாதாரண கருக்கலைப்புக்கு எதிராக போராடும் ‘உலக கருக்கலைப்புக்கு எதிரான இயக்கம்’ இந்த சம்பவத்திற்கு மௌனம் காக்கிறது.

திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர்

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே. அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. அப்படியென்றால், ஒரு நபர் இந்தியக் குடிமகன் தான் என்பதில் முழுமையான திருப்தியும் உறுதியும் இல்லாமல், சிலருக்கு இந்த பயண ஆவணத்தை மோடி அரசு வழங்குகிறதா?

யுவதேசம் சமூக ஊடகம்

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர். உண்மையில் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்த மாட்டார்கள். அடிப்படையில் எப்படி பேச வேண்டும் என்று அவருக்கு தனியாக பாடம் எடுக்க வேண்டும் போலும்.

Share
FacebookXWhatsAppTelegram