தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Aug 2026, 9:39 pm

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

கான்பூர்-லக்னோ விரைவுச்சாலை அமைக்க கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ‘செயல்திறனற்றது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்புகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

கேட்கப்பட வேண்டிய ஒரே கேள்வி இதுதான். இ20 எரிபொருள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் புகார்கள் அனைத்தும் தவறானவை என்று மோடி அரசு எந்த அடிப்படையில் உறுதியாக நம்புகிறது? ஒருவேளை இது ஏதேனும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தால், அந்தத் தரவுகளை அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.என்.பாலகோபால்

இளம் தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க பாஜக அரசு தயாராக இல்லை. ஆனால் இப்போது, இது மிகவும் தீவிரமான சூழல் என்பது ஆர்எஸ்எஸ் தலைவருக்கும் மற்ற தலைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் ஜென் சி தலைமுறையினருடன் பேசுகிறார்கள்.

அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா

ஜந்தர் மந்தர் போராட்டமும் நாடு தழுவிய போராட்டங்களும், உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போராட முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளைத் திறந்துவிட்டுள்ளன. உங்கள் இலக்கை அடைவது சாத்தியமற்றது என்று ஆளும் தரப்பினர் கூறலாம். ஆனால், உங்கள் போராட்டத்தின் இலக்குகளை உங்களால் நிச்சயம் அடைய முடியும்.