தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 Jul 2026, 8:55 pm

சிஐடியு கேரள மாநிலச் செயலாளர் வி.சிவன் குட்டி

மோடி அரசால் கொண்டு வரப்பட்ட சுரண்டல் தன்மையுடைய புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்த, தொழிலாளர்களுக்கு ஆதரவான முந்தைய எல்டிஎப் அரசாங்கம் மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே கேரளத்தில் இன்னும் தொழில்துறை தகராறுகள் சட்டம் அமலில் உள்ளது.

சிவசேனா (உத்தவ்) பொதுச் செயலாளர் ஆதித்யா

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி செய்த ஏதேனும் ஒரு இந்திய நகரம் உள்கட்டமைப்பிலோ அல்லது நிதியிலோ சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளதா என்பதை நிரூபிக்க மோடி உள்ளிட்டோர் தயாரா? முறைகேடுகளை மட்டுமே பாஜகவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். ராமர் கோவிலை கூட விட்டு வைக்கவில்லை.

நாகா மாணவர்கள் முன்னணி

மோடி ஆட்சியில் பணத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது வாடிக்கையாகிவிட்டது. நீட் தேர்வை தொடர்ந்து நெட் தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது. ஒரு பிடிஎப் பிரிண்ட் ரூ.2.25 லட்சமாம். நெட் தேர்வின் கடைசி தாளான சமூகவியல் பாட வினாத்தாள் மட்டும்தான் கசிந்ததா? மற்ற பாடங்களின் நிலைமை சந்தேகமாக உள்ளது.

பத்திரிகையாளர் அலெக்ஸ் கோலே

உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட தலையீடு இந்தத் தொடரின் மீது ஒரு கருப்பு நிழலைப் படியச் செய்துள்ளது. இறுதி ஆட்டத்தின் விசில் முழங்கி முடிந்த பிறகும், டிரம்ப் செய்த தவறான முடிவின் கறை இந்த உலகக்கோப்பையைத் தொடர்ந்து துரத்தும்.