தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 Jul 2026, 8:33 pm

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.ராஜீவ்

கேரள யுடிஎப் அரசாங்கம் மாநில அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறது. ஆளும் தரப்பிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே விதிமுறைகளை மீறி மாநில அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்.

பத்திரிகையாளர் ரவீஷ் குமார்

நீதிமன்றத்தின் மீது சமூகத்தில் அதிகரித்து வரும் விரக்தியை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். குடிமக்கள் நம்பிக்கையுடன் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். ஆனால் பலர் தாங்கள் சுவர்களில் மோதுவது போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். நீதிமன்றமே நம்பிக்கையின் கடைசி இடமாகும், அந்த விரக்தியைப் போக்குவதற்கு அதன் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மட்டுமே ஒரே வழியாகும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி

ராமர் கோவில் நிதி திருட்டு என்பது ஒரு தவறு அல்ல. திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்ளை ; சிசிடிவி கேமராக்களின் முன்னால் நடந்த வெளிப்படையான கொள்ளை ஆகும். இந்தத் திருட்டு நடக்க அனுமதித்தது யார்? கொள்ளையடித்த உண்மையான நபர்களின் பெயர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கூட இடம்பெறவில்லை. ஏதோ மர்மம் உள்ளது.

திரிணாமுல் எம்.பி., சவுகதா ராய்

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் அனைத்தும் அரசுமுறை பயணம் அல்ல, போலியானது. ஆஸ்திரேலியாவில் அதானி க்கு நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன, அங்கி ருந்துதான் அதானி நிலக்கரியை இறக்குமதி செய்கிறார். எனவே, தனது தொடர்புகளை வலுப்படுத்தவே பிரதமர் மோடி அங்கு சென்றார்.