முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Jul 2026, 7:56 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் முன்னாள் அமைச்சர் ஆர்.பிந்து

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகளாக மாற்றும் கேரள யுடிஎப் அரசின் முடிவு மிக மோசமானது. இந்தத் திட்டம் கேரள உயர்கல்வித் துறையில் நீண்டகால பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

திரைக்கலைஞர் ஷில்பா ஷிண்டே

நாட்டில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நாட்டில் யாரையும் நம்ப முடியவில்லை. துயரச் சம்பவங்களுக்குப் பிறகு பெண்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தும் அதே நபர்கள் தான், நாங்கள் நீதிக்காகப் போராடும்போது எங்களைக் கேள்வி கேட்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம். போராடுவதற்கு தடையாக தனி சட்டம் ஒன்று இல்லை.

யுவதேஷ் சமூக ஊடகம்

மக்கள் கோரிக்கை விடுக்காமலேயே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சிலைகளையும் பிரதமர் மோடி மீட்டு, அதனை நம் நாட்டிற்கு கொண்டு வரும் வேலைகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் பிரதமர் ஆவதற்கு முன்பு கருப்புப்பணத்தை மீட்டு, அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்ற வாக்குறுதி பற்றி கேட்டால், மோடி சிலை போன்று அசையாமல் இருக்கிறார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

நன்கொடை திருட்டுக்கு இடையே அயோத்தியில் மிகப்பெரிய நில மோசடிகள் நடந்துள்ளன. அதற்கு ஆதாரமான அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளன. மோசடிகள் நடந்துள்ளதை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள போதிலும் அதற்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram