தீக்கதிர் முக்கிய செய்திகள்
17 Jul 2026, 8:11 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

கேரளத்தில் உள்ள இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்தின் துயரங்களை அதிர்ச்சியூட்டும் வகையில் நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது. மனிதனின் அறிவுத்திறன் வளர வளர, நம் வாழ்வாதாரம் ஏன் இன்னும் நிச்சயமற்றதாக மாற வேண்டும்? தொழில்நுட்பத்தை சந்தை சக்திகள் அல்ல, சமூகக் கூட்டமைப்பே நிர்வகிக்க வேண்டும்.

நியூயார்க் மாநகர மேயர் ஜோரன் மம்தானி

உமர் காலித்தின் தில்லி சிறைவாசம் ஆறாவது ஆண்டில் நுழையும் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? நெல்சன் மண்டேலா மீது ஒரு காலத்தில் சுமத்தப்பட்ட அதே போலியான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் இப்போதும் ஒரு அரசியல் கைதி மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சீவ் ஜா

தில்லியில் வாக்காளர்களை நீக்க திட்டமிட்டுத்தான் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்பட்டது. கோடை விடுமுறை காலத்தில் தில்லியில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், அவர்களை ‘இல்லாதவர்கள்’ என்று தவறாகக் குறித்து, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுசீரமைப்புடன் இணைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதனை சட்டமாக அமல்படுத்த பாஜகவிற்கு நேற்று பெரும்பான்மை இல்லை, இன்றும் இல்லை, எதிர்காலத்திலும் இருக்காது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.