தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

கரப்பான் பூச்சி ஜனதா தலைவர் அபிஜித் தீப்கே

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்கும், மாணவர்களுடன் துணை நின்றதற்கும் பாரதிய கிசான் யூனியனுக்கு (விவசாய அமைப்பு) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது எனது தலைமையிலான அமைப்புக்கு அளித்த ஆதரவுக்காக அல்ல. மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அளித்த சக்திவாய்ந்த ஆதரவாக கருதுகிறோம்.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள். தங்களது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யாமல் பதவியை விட்டு விலகிய பிரிட்டன் பிரதமர்களின் வரிசையில் கீர் ஸ்டார்மர் இப்போது கடைசியாக இணைந்துள்ளார். அதே வேளையில், இந்தியா இதே காலகட்டத்தில் ஒரே ஒரு பிரதமரை மட்டுமே கண்டுள்ளது. காரணம் இங்கு ஜனநாயக பாதுகாப்பு நிலைமை அப்படி.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

நாட்டில் மக்களின் வருமானம் எதுவும் உயரவில்லை. உண்மையான ஊதிய வளர்ச்சி ஆண்டுக்கு சுமார் 4.3% ஆக மட்டுமே இருக்கும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த 4.3% இலக்கை இன்னும் எட்டவில்லை. இது மிக பலவீனமான வளர்ச்சியாகும். ‘தரவுகளைத் திருத்தும்’ அரசியல் அறிவியலின் வேலை மட்டுமே மோடி அரசுக்கு தெரியும்.

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

ராமர் கோவில் உலகின் மிகப்பெரிய கோவில் என்று மோடி கூறுகிறார். ஆனால் அந்த கோவிலில் அரங்கேறியுள்ள நன்கொடை திருட்டுச் சம்பவம் தொடர்பாக இன்னும்எப்ஐஆர் பதிவு செய்யப்பட வில்லை. அரசுக்கு எதிரான மக்களின் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படும்?