முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

29 Sept 2026, 9:13 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய்

ஒன்றிய அரசாங்கத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எந்தவொரு திட்டமும் மோடி அரசிடம் இல்லை. ஒவ்வொரு இளைஞரின் தலைக்கு மேலேயும் வேலைவாய்ப்பின்மை என்ற விஸ்வரூபப் பிரச்சனை தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசோ மௌனம் காக்கிறது. ஜென் ஸி-க்களைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

நாகா மாணவர்கள் முன்னணி

பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி இந்த ஆண்டு இரண்டு முறை பேசியுள்ளார். அம்மாநில மக்களுக்காக அல்ல; வன்முறையைக் குறைப்பது பற்றியும் அல்ல. நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவை புகழ்பாடுவதற்கு மட்டுமே மோடி மணிப்பூர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்.

சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே

மும்பையில் அக்டோபர் 2 அன்று நாங்கள் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. குடிமக்களின் குரலை அடக்குவதற்கான இத்தகைய தந்திரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. காந்தி ஜெயந்தி (அக். 2) அன்று போராட்டம் நடத்தும் உரிமை மறுக்கப்பட்டால், மும்பையில் ‘ஜெயில் பரோ போராட்டம்’ (சிறை நிரப்பும் போராட்டம்) நடத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

தேர்தல் முறைகேடு மூலம் மேற்கு வங்கத்தை பாஜகவுக்குப் பரிசளித்ததற்காக ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் அல்லது நாட்டின் குடியரசுத் தலைவராக்க வேண்டும். தேர்தல் முறைகேட்டு விவகாரத்தில் ஞானேஷ் குமார் தப்பிக்க முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram