தீக்கதிர் முக்கிய செய்திகள்
15 Jun 2026, 9:04 pm

யூடியூபர் துருவ் ரதி

திரிணாமுல் அதிருப்தி எம்.பி.,க்கள் திடீரென ‘என்சிபிஐ’ என்ற அறியப்படாத சிறிய கட்சியில் இணைந்துள்ளனர். பணத்தை வெளுப்பதற்காக உருவாக்கப்படும் ‘ஷெல் நிறுவனங்கள்’ (போலி நிறுவனங்கள்) பற்றி கேள்விப்பட்டிருப்போம். இப்போது, எம்.பி.,க்களை வெளுப்பதற்காக (மறுசுழற்சி செய்ய) ‘ஷெல் அரசியல் கட்சிகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ‘விஸ்வகுரு’ஆட்சியில் மட்டுமே செல்லுபடியாகும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

இவிஎம் - விவிபேட் சோதனையே தேர்தல் ஆணையத்தின் மீது முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழி. அதன் செயல்முறை வழிமுறைகளை பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்துவதாகும். ஆனால் இந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து முடக்கி வருகிறது.

மாநிலங்களவை எம்.பி., அபிஷேக் மனு சிங்வி

ராமர் கோவிலில் நன்கொடைகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு என்பது நம்பிக்கை, நம்பகத்தன்மை சார்ந்த ஒரு கேள்வியாகும். கோடிக் கணக்கான மக்களின் பக்தி, அர்ப்பணிப்பின் மீது கட்டப்பட்ட ஒரு நிறுவனம், இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, அங்கு வெளிப்படைத்தன்மை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்க முடியாது.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் வேன் ஒன்று கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட போது தீயணைப்பு பிரிவுக்கு தொடர்பு கொண்ட சூழலில், அங்கு கிணறு இல்லை என்று கூறியுள்ளார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படித் தான் நடக்குமோ?